மிஸ் பிரான்ஸ் 2024 : இன்று இறுதிச் சுற்று! - காத்திருக்கும் பரிசுக்குவியல்!!
16 மார்கழி 2023 சனி 17:13 | பார்வைகள் : 10033
2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியின் இறுதிச் சுற்று இன்று சனிக்கிழமை இடம்பெறுகிறது. 30 போட்டியாளர்களில் இருந்து ஒருவர் இன்று வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். நடப்பு ஆண்டில் மிஸ் பிரான்ஸ் அழகியாக உள்ள Indira Ampiot, போட்டியிடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மிஸ் பிரான்ஸ் 2024 ஆம் ஆண்டுக்கான அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பல பரிசுக்குவியல்கள் காத்திருக்கின்றன.
வெற்றியாளர் பிரான்சுக்கான மிஸ் பிரான்ஸ் நிறுவனத்தில் (Société Miss France) ஊழியராக பணியாற்ற முடியும். மாதம் அவருக்கு 3,000 யூரோக்கள் சம்பளம் வழங்கப்படும்.
அத்தோடு, Arc de Triomphe அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒருவருட காலத்துக்கு இலவச ஆடம்பர வதிவிடம் வழங்கப்படும்.
அதுபோல் விளம்பரதாரர்களால் மகிழுந்து, நகைகள், சுற்றுலாத்தலங்களுக்கான பயணங்கள் போன்றவையும் வழங்கப்படும். 2024 ஆம் ஆண்டு மிஸ் பிரான்ஸ் அழகிக்கு 25,000 யூரோக்கள் மதிப்புள்ளToyota Yaris Cross Audace மகிழுந்து ஒன்று வழங்கப்பட உள்ளது.
30 போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த இறுதி போட்டி, இன்று தொலைக்காட்சியில் நேரலையாக பார்வையிட முடியும்.
(புகைப்படத்தில், 2023 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகியாக Indira Ampiot அறிவிக்கப்பட்ட போது..)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan