சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல் நடத்திய கைதி!!
16 மார்கழி 2023 சனி 15:29 | பார்வைகள் : 11758
சிறைசாலை கைதி ஒருவர் மூன்று அதிகாரிகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளார். Lille-Sequedin (Nord) சிறைச்சாலையில் இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை வழமையான சோதனை நடவடிக்கைகளுக்காக சிறைச்சாலை மேற்பார்வையாளர் ஒருவர் குறித்த கைதியின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது கைகளை பின்னால் கட்டியபடி அதிகாரியை நெருங்கிய கைதி, திடீரென அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். உடைந்த கண்ணாடி போத்தல் ஒன்றினால் அதிகாரியை தாக்கியுள்ளார்.
அதையடுத்து, மேலும் இரு அதிகாரிகள் சம்பவ அறைக்கு உதவிக்கு ஓடிவந்துள்ளனர். அவர்களையும் குறித்த கைதி தாக்கியுள்ளார்.
பின்னர் ஒருவழியாக கைதியை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமாக அவர் சிறைவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan