Place de la Nation பகுதியில் கத்திக்குத்து தாக்குதல்! - ஒருவர் பலி!!
16 மார்கழி 2023 சனி 13:29 | பார்வைகள் : 10750
Place de la Nation பகுதியில் (12 ஆம் வட்டாரம்) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் நாற்பது வயதுகளையுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் இத்தாக்குதல் Avenue du Trône பகுதிக்கு மிக அருகே இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர்.
அங்கு 40 வயதுடைய ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மயங்கி கிடந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கானவர் வீடற்றவராக (SDF) இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர் தேடப்பட்டு வருகிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan