மார்செய் நகரில் காணாமல் போன பெண் - 40 நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு - காதலன் கைது!
16 மார்கழி 2023 சனி 07:00 | பார்வைகள் : 20382
மார்செய் நகரில் கடந்த நவம்பர் 3 ஆம் திகதி காணாமல் போன Mélodie எனும் பெண், 40 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
டிசம்பர் 14 ஆம் திகதி, வியாழக்கிழமை இரவு மார்செயின் புறநகர் பகுதியில் இருந்து அவரது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. 34 வயதுடைய அவர், பெண் குழந்தையின் தாய் ஆவார். மார்செயில் கணவருடன் வசித்த அவர், கடந்த நவம்பர் 3 ஆம் திகதி அன்று காணாமல் போயிருந்தார். பின்னர் அவருடைய கணவர் Pearl , மார்செய் 10 ஆம் வட்டார காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார்.
இந்நிலையிலேயே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலையில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் Mélodie இன் காதலன் என தெரியவந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan