Goussainville : வீடற்ற ஒருவர் மீது தாக்குதல்! - தாக்குதலாளியை கைது செய்த அதிரடிப்படையினர்!
15 மார்கழி 2023 வெள்ளி 16:19 | பார்வைகள் : 9239
வீடற்ற ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவரை RAiD அதிரடிப்படையினர் சுற்றி வைத்து கைது செய்தனர்.
இன்று டிசம்பர் 15, வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் Goussainville (Val-d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள rue Ela-Constantinide வீதியில் வைத்து வீடற்ற (SDF) ஒருவர் தாக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து அதிரடிப்படையினர் காலை 9 மணி அளவில் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். rue Ela-Constantinide வீதி முற்றாக முடக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
பின்னர் சில நிமிடங்களில் அசம்பாவிதங்கள் இன்றி தாக்குதலாளி கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, வீடற்ற ஒருவரை அங்கு வசிக்கும் ஒருவர் தனது வீட்டுக்குள் பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்துள்ளார். அவரை தாக்கியும் உள்ளார். பின்னர் அதிரடிப்படையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டு தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan