Yvelines : மதில் உடைந்து விழுந்து சிறுவன் படுகாயம்!!
15 மார்கழி 2023 வெள்ளி 21:48 | பார்வைகள் : 12704
சுற்றுமதில் ஒன்று இடிந்து விழுந்ததில் 11 வயதுடைய சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். Montesson (Yvelines) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள Sophoras பூங்காவின் சுற்று மதி வியாழக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. 15 மீற்றர் நீளமுடைய சுற்றுமதில் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுக்குள் 11 வயதுடைய சிறுவன் ஒருவர் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார். சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு Robert-Debré மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் பூங்காவில் இருந்த பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அங்கு உடனடியாக உளநல சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டது.
காயமடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை இடம்பெற்று வருகிறது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan