Val-d'Oise : குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக - 40 பேர் வெளியேற்றம்!!
13 மார்கழி 2023 புதன் 12:36 | பார்வைகள் : 10812
குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நோக்கோடு அங்கு வசித்த 40 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Sarcelles (Val-d'Oise) நகரின் rue Pierre-Brossolette வீதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திடீரென வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவானது. இதில் ஏழு பேர் வரை சிறிய காயங்களுக்கு உள்ளாகினர். கட்டிடத்தின் வெளிப்புற சுவரில் ஏற்பட்ட பிளவு, மேல் தளங்களுக்கும் பரவியது.
பின்னர் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு, கட்டிடத்தில் வசித்த அனைவரும் முதலில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கட்டிடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றும் வேறு கட்டிடத்துக்கு (எதிரே உள்ள) மாற்றப்பட்டுள்ளது.
அருகில் உள்ள பல்வேறு இடங்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் வேறு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும் என அறிய முடிகிறது.
கட்டிடத்தில் ஏற்பட்ட பிளவு தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan