Vitry-sur-Seine : பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சிறுவன் விபத்தில் பலி!!
13 மார்கழி 2023 புதன் 09:12 | பார்வைகள் : 12685
பாடசாலை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 14 வயதுச் சிறுவன் ஒருவர் விபத்துக்குள்ளாகி பலியாகியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் Vitry-sur-Seine (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. மாலை 5.30 மணி அளவில் குறித்த சிறுவன் மின்சார ஸ்கூட்டர் (trottinette) ஒன்றில் rue Paul-Vaillant-Couturier வீதியில் பயணித்த நிலையில், மகிழுந்து ஒன்றுடன் மோதுண்டுள்ளார்.
பாதசாரிகள் கடவையில் குறித்த சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்டபோது, Fiat 500 ரக மகிழுந்து சிறுவனை மோதித்தள்ளியது.
தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டபோதும் சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போனது. சிறுவன் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக அறிய முடிகிறது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
அதிர்ச்சிக்குள்ளான மகிழுந்து சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan