யாரை இயக்கப் போகிறார் வினோத்...?
12 மார்கழி 2023 செவ்வாய் 08:43 | பார்வைகள் : 11508
துணிவு படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் 233வது படத்தை வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது கமல்ஹாசன், பிரபாஸ் உடன் நடிக்கும் கல்கி 2898 ஏடி, மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் ஆகிய படங்களில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. இதனால் வினோத் இயக்கும் படத்தில் இப்போதைக்கு அவர் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே தான் கதை கூறியுள்ள தனுஷ், யோகி பாபு ஆகியோரிடத்தில் மீண்டும் அவர் கால்சீட் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பிஸியாக இருப்பதாக சொல்லி விட்டனர். இதனால் ஏற்கனவே தான் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த கார்த்தியிடம் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு கால் சீட் கேட்டு வருவதாகவும், இன்னொரு பக்கம் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தனது மூன்று படங்களில் நடித்த அஜித் குமாரை மீண்டும் இயக்க கால்சீட் கேட்டு வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan