பிறந்தநாள் வாழ்த்து மழையில் நனையும் நடிகர் ரஜினிகாந்த்!
12 மார்கழி 2023 செவ்வாய் 08:14 | பார்வைகள் : 7766
கருப்பென்ற சொல்லே கலையுலகின் சிறப்பென்று காட்டி, செறுக்கேதுமின்றி நித்தம் பணி செய்து, நீடித்த புகழ் கொடி நாட்டி, நெருப்பென தோன்றி, நிரந்தர “சூப்பர் ஸ்டார்” ஆன நடிகர் ரஜினிகாந்த்தின் 73வது பிறந்த தினம் இன்று. இந்த தலைமுறை நாயகர்கள் கூட எளிதில் நெருங்கா முடியா உச்சத்தில், அதே வேகத்தோடும், விவேகத்தோடும் கலையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டாராக நின்று ஆடி, நித்தம் வெற்றியை சுவைக்கும் ரஜினிகாந்த் நேற்றல்ல, இன்றல்ல, நாளையல்ல என்றென்றும் அவரே சூப்பர் ஸ்டார் என கலையுலகில் நிரூபித்து வருகிறார்.
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்.
கமல்
அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்.
அமைச்சர் உதயநிதி
தமிழ் சினிமாவில் தலைமுறைகள் கடந்து எல்லோரையும் மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்-க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கலையுலகப் பயணம் இன்னும் பல உயரங்களை அடையவும் - நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழவும் மனமார்ந்த வாழ்த்துகள்.
இவர்கள் தவிர தனுஷ், அனிருத், கார்த்திக் சுப்பராஜ், வரலட்சுமி, லக்ஷமி மஞ்சு, அருணா குகன், வசந்த் ரவி, அல்போன்ஸ் புத்ரன், விஷ்ணு விஷால், கோபிசந்த் மாலினேனி, தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் பிறந்தநாள் தொடர்பாக எக்ஸ் தளத்தில் #HBDSuperstarRajinikanth, #Thalaivar, #HBDRajinikanth ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.---
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan