பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல் விலகுகிறாரா ?
11 மார்கழி 2023 திங்கள் 14:56 | பார்வைகள் : 13718
நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகப் போவதாக செய்தி ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அப்படி அவர் விலகினால் அவருக்குப் பதிலாக யாரை தொகுப்பாளராகப் போடலாம் என்பதையும் ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏழு சீசன் வரையுமே கமல்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இடையில் ‘விக்ரம்’ பட சமயத்தின்போது மட்டும் படப்பிடிப்பிற்காக அவர் விலக, அவருக்குப் பதிலாக சிம்பு தொகுத்து வழங்கினார். சில வாரங்கள் தடுமாறினாலும் பிறகு சமாளித்துக் கொண்டார் சிம்பு.
இந்த சீசனில் வினுஷா குறித்து நிக்சன் உருவகேலி செய்ததை கமல் தட்டிக் கேட்காமல் போனது, பிரதீப் விஷயத்தில் அவரை பேச விடாமல் ரெட் கார்டு கொடுத்தது, போன வாரம் நிக்சன் - அர்ச்சனா விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்டது என கமல் மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த சீசனில் மட்டுமல்ல, இதுபோல ஒவ்வொரு சீசனிலும் கமல் மீது அதிருப்தி வந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால், கமல் நிகழ்ச்சியிலேயே தவறைத் தட்டிக் கேட்கவில்லை என்றால் எப்படி அரசியல் களத்தில் தட்டிக் கேட்பார் எனவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதனால், கமல் பிக் பாஸை விட்டு விலக வேண்டும் எனவும் அவருக்குப் பதிலாக மீண்டும் சிம்புவே வர வேண்டும் எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதனால், தனது அரசியல் வாழ்வு பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் கமலுக்கு எழுந்துள்ளதாகவும் இந்த சீசனோடு அவர் பிக் பாஸை முடித்துக் கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மையான செய்தி என கமல்தான் உறுதிப்படுத்துவார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan