21 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் ஒருவர் விமான நிலையத்தில் கைது!
6 கார்த்திகை 2023 திங்கள் 19:00 | பார்வைகள் : 13305
போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற பயணி ஒருவர் Charles-de-Gaulle விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நவம்பர் 1 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 60 வயதுடைய ஒருவர் அன்றைய தினம், பெரு நாட்டில் இருந்து சாள்-து-கோல் விமான நிலையத்தினை வந்தடைந்தார். அவர் 21 கிலோ எடையுடைய கொக்கைன் போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற நிலையில், சுங்கவரித்துறையினரால் கைது செய்யபப்ட்டார்.
Lima (Peru) நகரில் இருந்து வருகை தந்த குறித்த நபர், இங்கிருந்து Barcelona (Spain) நகருக்குச் செல்லும் விமானத்துக்காக காத்திருந்த நிலையிலேயே சுங்கவரித்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், நவம்பர் 3 ஆம் திகதி அவருக்கு பொபினி குற்றவியல் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan