தடுப்பூசியினால் உயிரிழந்த சிறுவன்! - உடற்கூறு விசாரணைகளில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!!
1 கார்த்திகை 2023 புதன் 08:25 | பார்வைகள் : 11551
கொவிட் 19 தடுப்பூசியினால் சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. Nantes நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Nantes (Loire-Atlantique) நகரில் உள்ள Saint-Dominique எனும் கொலெஜில் 12 வயதுடைய ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவர் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி தடுப்பூசியினை போட்டுக்கொண்டார். அதன் பின்னர் இருக்கையில் அமர்ந்த அவர், திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளானார். பின்னர் மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து அங்கு அவர் உயிரிழந்தார்.
அதையடுத்து, பிரான்சின் சுகாதார அமைச்சர் Aurélien Rousseau, “சிறுவனது இழப்புக்கு தடுப்பூசிக்கும் தொடர்பில்லை!” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிறுவனது சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தியதில், தடுப்பூசியின் ஒவ்வாமையே மரணத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
”தடுப்பூசியால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக இந்த வகையான அசௌகரியம் ஏற்படலாம், ஆனால் தடுப்பூசி தயாரிப்பு அல்லது தடுப்பூசியின் தரக் குறைபாடு ஆகியவற்றுடன் தொடர்பில்லாதது.” என பிராந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan