நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி - மீண்டும் 49.3-ஐ கையில் எடுத்த பிரதமர்!!
27 கார்த்திகை 2023 திங்கள் 06:00 | பார்வைகள் : 18568
49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் தொடர்ச்சியாக பயன்படுத்துகிறார் என தெரிவிக்கப்பட்டு, அவரது அரசாங்கம் மீது நம்பிக்கை இலலா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
La France Insoumise கட்சியினர் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை சமர்ப்பித்திருந்தனர். அதையடுத்து பாராளுமன்றத்தில் வாக்கெடுக்கப்பட்டது. நம்பிக்கை இலலா பிரேரணையை நிறைவேற்ற 289 வாக்குகள் தேவை எனும் நிலையில், ஆதரவாக வெறுமனே 89 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. அதையடுத்து பிரேரணை தோலவியில் முடிந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
ஆனால் இச்சம்பவம் முடிவடைந்து சில மணிநேரங்களில் பிரதமர் மீண்டும் 49.3 -ஐ கையில் எடுத்தார். 2024 ஆம் ஆண்டுக்கான ”சமூக பாதுகாப்புக்கான வரவுசெலவுத் திட்டத்தினை” (Budget de la Sécurité sociale) முழுமையாக நிறைவேற்ற 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தினார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மீண்டும்
La France Insoumise கட்சியினர் ’நம்பிக்கை இலலா பிரேரணை பதிவு செய்வதாக தெரிவித்தனர்.
**
49.3 எனும் அரசியலமைப்பு சட்டமானது அவசரகாலத்தின் போது பயன்படுத்தப்படுவதாகும். பாராளுமன்றத்தில் 10% சதவீத ஆதரவு வாக்குகள் இருந்தால் மட்டும் போதுமானது. மொத்தமாக வாக்கெடுக்க தேவையில்லை எனும் சட்டமாகும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan