Alfortville : குழந்தைகளை கொன்றுவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த நபர்! - இரு சடலங்கள் மீட்பு!!
26 கார்த்திகை 2023 ஞாயிறு 15:51 | பார்வைகள் : 12833
குழந்தைகளை கொன்றதாக நபர் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரது வீட்டில் இருந்து இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று நவம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Dieppe (Normandy) நகரில் உள்ள காவல்நிலையம் ஒன்றுக்குச் சென்ற ஒருவர், தனது குழந்தைகளை கொன்றதாக தெரிவித்துள்லர். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், Alfortville (Val-de-Marne) நகரில் உள்ள அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
வீட்டுக்குள் இருந்து இரு குழந்தைகளின் சடலங்களை காவல்துறையினர் மீட்டனர். மூன்றாவது குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் அக்குழந்தையின் உடல்நலம் குறித்து அறிய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளில், குறித்த நபர் குடும்ப வன்முறையினால் முன்னதாகவே அறியப்பட்டவர் எனவும், குழந்தைகள் மீட்கப்பட்ட அவரது முன்னாள் மனைவியின் வீட்டுக்குச் செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan