கல்லூரி நிகழ்வுகளை மதிக்கவில்லை 605 மாணவர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை 85 மாணவர்கள் வெளியேற்றம்.
24 கார்த்திகை 2023 வெள்ளி 09:22 | பார்வைகள் : 22491
பேராசிரியர் Samuel Paty 2020ல் Conflans-Sainte-Honorine பகுதியிலும், பேராசிரியர் Dominique Bernard 2023ல் Arras பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கான அரச தேசிய மரியாதை வணக்க நிகழ்வுகள், தேசிய கல்வி அமைச்சின் பணிப்பின்பெயரில் நாடுமுழுவதும் உள்ள கல்லூரிகளில் நடத்தப்பட்டது.
குறித்த வணக்க நிகழ்வுகளையும், ஒரு நிமிட மௌன அஞ்சலி நிகழ்வுகளையும் சீர்குலைத்த அல்லது அவமதித்த மாணவர்கள் மீது கல்வி அமைச்சின் ஒழுங்காற்று குழு நடவடிக்கைகள் எடுத்துள்ளது அதன்படி 85 மாணவர்கள் நிரந்தரமாக கல்லூரிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். 605 மாணவர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட 605 மாணவர்களில் 322 மாணவர்கள் தற்காலிகமாக கல்லூரிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர், ஏனையோர் மீது முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
சாதரணமாக கல்லூரியின் ஒழுங்கு முறைகளை மீறும் மாணவர்கள் கல்லூரி அதிபர் கொண்டு குழுவால் மூன்று தடவைகள் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டு, அதன் பின்னரே ஒழுங்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் மேல் குறிப்பிட்ட ஒழுங்காற்று நடவடிக்கை நேரடியாகவே எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவன் கல்லூரியில் இருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நீக்கப்பட்டால், பிரான்சின் கடல்கடந்த மாவட்டங்கள் உட்பட நாட்டின் எந்தவொரு கல்லூரியிலும் கல்விகற்க முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan