சிறைச்சாலையில் இருந்து தப்பித்த கைதி - காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதினார்!
19 கார்த்திகை 2023 ஞாயிறு 16:56 | பார்வைகள் : 11659
சிறைச்சாலையில் இருந்து தப்பித்த கைதி ஒருவர் காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதியுள்ளார். Essonne மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
26 வயதுடைய ஒருவர் வியாழக்கிழமை Évry நகர சிறைச்சாலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் மகிழுந்து ஒன்றில் பயணித்த நிலையில், அவர் மீது சந்தேகம் கொண்ட CRS காவல்துறையினர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால் மகிழுந்தினை காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். அதிகாரிகளின் மகிழுந்து ஒன்றுடன் மோதியுள்ளார். அவர் பயணித்தது போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட திருடப்பட்ட மகிழுந்து எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாமும், போதைப்பொருள் உட்கொண்டும் இருந்துள்ளார்.
உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் விசாரணைகளில், அவர் சிறைச்சாலையில் இருந்து தப்பித்த கைதி என தெரியவந்துள்ளது. அதன் பின்னரே அவர் வியாழக்கிழமை Évry நகர நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan