வீட்டிலிருந்து பணி புரிவது நிறுவன வளர்ச்சிக்கு உதவுமா? ஆய்வு முடிவுகள்

16 கார்த்திகை 2023 வியாழன் 09:44 | பார்வைகள் : 7826
2020 கொவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் உலகெங்கும் பல நாடுகளில் தங்கள் பணியாளர்களை "வர்க் ஃப்ரம் ஹோம்" (Work From Home) எனும் முறையில் வீட்டிலிருந்தே பணிபுரிய நிறுவனங்கள் அனுமதித்தன.
இது பெருமளவில் மென்பொருள் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களில் கடைபிடிக்கபட்டது.
ஆனால், சுமார் 2.5 வருட காலம் கடந்து, ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கின்றன. பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை முழுவதுமாக அலுவலக முறைக்கு மாற்றி விட்டன; ஒரு சில நிறுவனங்கள் படிப்படியாக மாறி வருகின்றன.
இரண்டு மாறுபட்ட வழிமுறைகளினாலும் நிறுவனங்களின் வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் குறித்து ஸ்கூப் டெக்னாலஜிஸ் மற்றும் பாஸ்டன் கன்சல்டின் குழுமம் ஆகிய நிறுவனங்கள் எடுத்த ஒரு ஆய்வில் சில ஆச்சரியம் அளிக்கும் முடிவுகள் வெளிவந்திருக்கிறது.
இந்த ஆய்வில் 554 பெரு நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில் 2.67 கோடி பணியாளர்கள் பணி புரிகின்றனர்.
இந்நிறுவனங்கள் முழுவதும் பணியாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டிலிருந்தும் அல்லது அலுவலகத்திற்கு வந்து பணிபுரியவும் அனுமதிக்கும் நிறுவனங்களில் அவற்றின் வருமானமும், வளர்ச்சியும் 21 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் தொழில்நுட்பத்தில் இருந்து காப்பீடு உள்ளிட்ட பல துறை நிறுவனங்களும் அடங்கும்.
புதிய பணியிடங்களுக்கு வீட்டிலிருந்து பணி புரிய அனுமதிக்கப்படும் நிறுவனங்களில், தொலைதூரத்தில் இருக்கும் பணியாளர்கள் சுலபமாக பணிபுரிய முடியும்.
இதனால், காலியிடங்களை நிரப்ப தேவைக்கு அதிகமாகவே திறமையான பணியாளர்கள் கிடைக்கிறார்கள் என்பது அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர இலக்குகளை சுலபமாக எட்டுவதாகவும் தெரிய வந்துள்ளது.
நன்றி மாலைமலர்
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1