எள்ளு சாதம்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 15673
எள் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? காலையில் அந்த எள்ளைக் கொண்டு சமையல் செய்ய ஆசையா? அப்படியானால் எள்ளைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு கலவை சாதம் செய்யலாம். இந்த சாதம் சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. இங்கு அந்த எள்ளு சாதத்தின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தாளிப்பதற்கு :
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
கறிவேப்பிலை - சிறிது
வறுத்த வேர்கடலை - 2 ஸ்பூன்
அரைப்பதற்கு :
கருப்பு அல்லது வெள்ளை எள் - 100 கிராம்
செய்முறை:
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள் சேர்த்து வறுத்து, பின் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
• பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
• பிறகு அதில் சாதம், உப்பு, கொத்தமல்லி தழை மற்றும் பொடி செய்து வைத்துள்ள எள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான எள்ளு சாதம் ரெடி!!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan