Paristamil Navigation Paristamil advert login

மனித உருவில் ஆன ரோபோ உருவாக்கம்

மனித உருவில் ஆன ரோபோ உருவாக்கம்

18 புரட்டாசி 2013 புதன் 08:02 | பார்வைகள் : 17584


 பலவிதமான வடிவங்களில் ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது மனித உருவில் ஆன 'ரோபோ' உருவாக்கப்பட்டுள்ளது.'டெர்மினேட்டர்–2' படத்தில் ஹொலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் எந்திரமனிதனாக நடித்து இருப்பார். அதுபோன்ற அமைப்பிலான மனித ரோபோ ஆக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

 
தனது உடலில் காயங்களோ அல்லது கோளோரோ ஏற்பட்டால் அதை அந்த ரோபோவே 2 மணி நேரத்தில் சரி செய்து கொள்ளும் திறன் படைத்தது.
 
இதை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தாங்கள் உருவாக்கிய இந்த ரோபோவை ரேஷர் பிளேடால் 2 துண்டுகளாக வெட்டி போட்டனர். ஆனால் 2 மணி நேரத்தில் அதை தானே 'ரோபோ' சரி செய்து ஒட்டிக்கொண்டது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
 
இது மிமெடிக் என்ற உலோக கலவையினால் ஆனது. இந்த உலோக கலவையை எலெக்ட்ரிக் பொருட்கள், கார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களில் உள்ள பிளாஸ்டிக் உதிரி பாகங்களுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்