Paristamil Navigation Paristamil advert login

கூகுளின் அதிரடி தடை

கூகுளின் அதிரடி தடை

26 கார்த்திகை 2013 செவ்வாய் 09:07 | பார்வைகள் : 15860


தன்னுடைய குரோம் பிரவுசருக்கு, பிற நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற Extension Program-களை பயன்படுத்த கூகுள் தடை விதித்துள்ளது.கூகுள் இயக்கி வரும் குரோம் வெப் ஸ்டோரிலிருந்து(Chrome Web Store) தரவிறக்கம் செய்யும் புரோகிராம்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் வகையிலான தடையை உருவாக்கியுள்ளது.

 
இந்த தடை பாதுகாப்பு கருதியே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது.
 
இதன் மூலம் மூலம், கூகுள் தன் பிரவுசரில் இயங்கும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை அதிகக் கவனத்துடன் கண்காணிக்க முடியும்.
 
பல புரோகிராம்கள் பிரவுசரின் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றி, திருட்டுத்தனமாக தகவல்களைத் திருடும் வேலைகளில் ஈடுபடுகின்றன.
 
இதுபோன்ற தீய நடவடிக்கைகளை விளைவிக்கும் புரோகிராம்களை கண்டறிந்து, தன்னுடைய ஸ்டோரிலிருந்து விலக்கிவிடும்.
 
இதனால் பயனாளர்கள் பாதுகாப்பான முறையில் இயங்க முடியும். 

வர்த்தக‌ விளம்பரங்கள்