Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

விண்டோஸ் 8-ல் பிரச்னையா?

விண்டோஸ் 8-ல் பிரச்னையா?

1 தை 2014 புதன் 11:00 | பார்வைகள் : 17812


 நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கணனியை பயன்படுத்துகிறீர்களா?

திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா?
 
இந்த சிஸ்டங்களில் இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம்.
 
உங்கள் கணனியை ஸ்விட்ச்-ஆன் செய்தவுடன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எப்8 கீயை விட்டுவிட்டு அழுத்தவும்.
 
இதனைச் சரியாக செய்தால், உங்களுக்கு ஊதா நிறத்தில் ஒரு திரை காட்டப்படும்.
 
இதன் தலைப்பு "Choose an option” என இருக்கும்.
 
இதில் "Continue”, "Troubleshoot” மற்றும் "Turn off your PC.” என மூன்று ஆப்ஷன்கள் தரப்படும்.
 
இவற்றில் Troubleshoot என்ற ஆப்ஷனைத் தட்டுங்கள், அல்லது கிளிக் செய்திடுங்கள்.
 
அதன் பின்னர் "Advanced options” என்பதில் கிளிக் செய்திடுங்கள். இங்கு கிடைக்கும் விண்டோவில் பல டூல்கள் காட்டப்படும்.
 
இவற்றைப் பயன்படுத்தி, உங்கள் சிஸ்டத்தின் பிரச்னை என்ன வெனச் சரியாகக் கண்டறியலாம்.
 
ஏற்கனவே சிஸ்டம் இமேஜ் பைல் உருவாக்கி வைத்திருந்தால், அந்த நிலைக்குக் கணனியை கொண்டு செல்ல இதில் ஆப்ஷன் தரப்பட்டிருக்கும்.
 
மேலும் கணனியை Safe Mode-க்கு கொண்டு செல்லவும் ஆப்ஷன் கிடைக்கும்.
 
இவற்றின் மூலம் சிக்கலைத் தீர்த்து இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்