Windows இயங்குதளத்தினைக் கொண்ட கைப்பேசி தயாரிப்பில் Sony
13 தை 2014 திங்கள் 09:18 | பார்வைகள் : 16271
Sony நிறுவனம் இதுவரையில் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளையே அறிமுகம் செய்து வந்துள்ளது.
ஆனால் முதன் முறையாக விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைப்பது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவித்தலை Sony நிறுவனத்தின் ஐரோப்பிய கிளைக்கு தலைமை தாங்கும் Pierre Perron என்பவர் வெளியிட்டுள்ளார்.
