Facebook Messenger Liteஇல் புதிய வசதி!
11 பங்குனி 2018 ஞாயிறு 10:27 | பார்வைகள் : 15434
பேஸ்புக் ஊடாக நண்பர்களுடன் சட் செய்து மகிழும் வசதியினை பேஸ்புக் மெசஞ்சர் லைட் அப்பிளிக்கேஷன் தருகின்றது.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது குறைந்த இணைய வேகத்திலும் சிறப்பாக செயற்படுவதுடன், குறைந்தளவு டேட்டாவையே பயன்படுத்துகின்றது.
இவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட இவ் அப்பிளிக்கேஷனில் மற்றுமொரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை காலமும் தரப்பட்டிராத வீடியோ சட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இணைய இணைப்புக்கள், புகைப்படங்கள், எழுத்து வடிவிலான மெசேஜ்கள் என்பவற்றினை மாத்திரமே இந்த அப்பிளிக்கேஷன் ஊடான சட்டிங்கில் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.
இதேவேளை 10 மெகா பைட் அளவே உடைய இந்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்துவதால் மொபைல் சாதனங்களின் வேகமும் குறையாது காணப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan