புதிய iPhone X தொடர்பில் கசிந்த புகைப்படம்!
22 ஆடி 2018 ஞாயிறு 09:33 | பார்வைகள் : 12385
ஆப்பிள் நிறுவனம் வருடம் தோறும் புதிய கைப்பேசிகளினை அறிமுகம் செய்து வருகின்றமை தெரிந்ததே.
இவற்றின் தொடர்ச்சியாக இவ் வருடமும் சில வகை கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
இவற்றுள் புதிய வகை iPhone X கைப்பேசிகளும் உள்ளடக்கம்.
இதன்படி 3 வகையான iPhone X கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இவை 5.8 அங்குல OLED திரை, 6.1 அங்குல LCD திரை, 6.5 அங்குல OLED திரை என்பவற்றினை கொண்டவையாகும்.
இந்நிலையில் குறித்த கைப்பேசிகளுக்கு பயன்படுத்தப்படும் முகப்பு கண்ணாடி தொடர்பான புகைப்படம் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.
எனினும் இக் கைப்பேசிகள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan