கூகிள் குரோம் பாவனையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம்

9 மாசி 2019 சனி 16:43 | பார்வைகள் : 11003
தற்போது பாவனையில் உள்ள அனேகமான அப்பிளிக்கேஷன்கள் வெள்ளை நிறப் பின்னணி கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும்.
எனினும் இவ்வாறான அப்பிளிக்கேஷன்களை இரவில் பயன்படுத்தும்போது கண்ணிற்கு அதிக அளவு வெளிச்சம் கிடைப்பதால் கண் பாதிப்படைய வாய்ப்புக்கள் இருப்பதுடன் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகின்றது.
இதனால் சில முன்னணி நிறுவனங்கள் தமது அப்பிளிக்கேஷன்களில் Dark Mode எனப்படும் கறுப்பு நிறப் பின்னணிக்கு மாற்றக்கூடிய வசதியினையும் வழங்கியுள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது கூகுள் நிறுவனமும் தனது குரோம் இணைய உலாவியில் கறுப்பு நிற பின்னணி வசதியினை தரவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை குரோம் உலாவியின் Incognito விண்டோ ஏற்கணவே கறுப்பு நிற பின்னணியைக் கொண்டே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.