Facebook தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்!
3 ஆவணி 2019 சனி 04:29 | பார்வைகள் : 12750
Facebook நிறுவனம் தவறான தகவல்களை மேலும் சிறந்த முறையில் கட்டுப்படுத்த அவற்றைச் சரிபார்க்கும் நிறுவனங்களுடன் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
தகவல்களைச் சரிபார்க்கும் மூன்றாம் தரப்பான Full Fact அறநிறுவனம் அதனையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஜனவரி மாதம் Facebookஇன் தகவல்களை ஆராயும் திட்டத்தில் அந்நிறுவனம் இணைந்தது.
தவறான தகவல்கள் எவ்வளவு வேகமாகப் பரவுகின்றன என்பதைக் கண்டறியவும் தகவல்களைச் சரிபார்ப்பது அவற்றை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்துகிறது என்றும் தெரிந்துகொள்ள Facebook கூடுதல் விவரங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று Full Fact கூறியது.
Facebookஇல் பதிவுசெய்யப்படும் தகவல்களைச் சரிபார்ப்பதன்வழி கடந்த ஆறு மாதத்தில் 171,800 டாலர் ஈட்டியதாக அறநிறுவனம் தெரிவித்தது.
தகவல்களைச் சரிபார்க்கும் திட்டத்தை Facebook கடந்த மூவாண்டாகச் செயல்படுத்துகிறது. சுமார் 54 தரப்புகள் 42 மொழிகளில் அத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan