5G தொழில்நுட்பம் கொண்ட புதிய iPhone திறன்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம்!
11 ஐப்பசி 2020 ஞாயிறு 12:49 | பார்வைகள் : 16589
Apple நிறுவனம், 5G தொழில்நுட்பம் கொண்ட புதிய iPhone திறன்பேசிகளை வரும் செவ்வாய்க்கிழமை அன்று அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைக் காட்டிலும் சீனாவில் 5G கைத்தொலைபேசிகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் Apple உடனடியாக அவற்றை அறிமுகம் செய்வது முக்கியம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்..
"Apple இருந்தாலும் இல்லையென்றாலும் 5G தொழில்நுட்பம், சீனாவில் அடியெடுத்து வைத்துள்ளது. 5G இல்லாத கைத்தொலைபேசிகளை விட 5G திறன்பேசிகள்தான் அதிகம் விற்கப்படுகின்றன." என்று Moor Insights & Strategy எனும் ஆய்வு நிறுவனம் கூறியது.
Samsung, Huawei ஆகிய நிறுவனங்கள் 5G தொழில்நுட்பம் கொண்ட திறன்பேசிகளை ஏற்கெனவே வெளியிட்டுள்ளன.
இதனால், Apple-உம் அவ்வாறு வெளியிட்டால்தான் தன்னுடைய நற்பெயரைத் தக்கவைக்கமுடியும் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan