Paristamil Navigation Paristamil advert login

புதிய வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ் ஆப்!

புதிய வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ் ஆப்!

10 கார்த்திகை 2020 செவ்வாய் 15:54 | பார்வைகள் : 16892


ஆன்லைனில் மூலம் ஷாப்பிங் செய்வதற்கான புதிய வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது.
 
விற்பனையாளர்கள் வாட்ஸ் ஆப் பிசினஸ் செயலியில் உள்ள கேட்லாக் வசதியை பயன்படுத்தி தாங்கள் விற்பனை செய்ய உள்ள பொருட்களின் புகைப்படங்களை தகவல்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 
இதை வாடிக்கையாளர்கள் தங்கள் சாட் பக்கத்தில் உள்ள ஷாப்பிங் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எளிதில் பார்த்து வாங்க முடியும். இந்த சேவையை ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இன்று முதல் பயன்படுத்தலாம் என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்