டிக் டாக்கை தடை செய்த முக்கிய நாடு!
4 சித்திரை 2023 செவ்வாய் 10:41 | பார்வைகள் : 13232
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
பாதுகாப்பு கருதி பிரித்தானிய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அரசின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக பிரித்தானிய நாடாளுமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா அரசும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.
இது தொடர்பில் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் கூறுகையில்,
டிக் டாக் செயலியால் ஏற்படும் சாதக, பாதங்கள் தொடர்பில் உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan