WhatsApp இன் புதிய அப்டேட்..!
28 சித்திரை 2023 வெள்ளி 09:35 | பார்வைகள் : 11694
உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர்.
இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.
உலகளவில் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளில் வாட்ஸ்அப் 8 வது இடத்தில் உள்ளது.
அந்த வகையில் தற்போது புதிய ஒரு திட்டத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்டை நான்கு சாதனங்களில் பயன்படுத்தலாம். அதாவது ஒரு தொலைப்பேசி இலக்கத்தை கொண்டு 4சாதனங்களில் பயன்படுத்தலாம்.
லின்க் செய்யப்பட்ட தொலைப்பேசி வேறு தனித்தனி வாட்ஸஅப்புடன் இணைந்திருக்கும்.ஆனால் இது தனியுரிமை கொண்டதாக இருக்கும்.
மேலும் 14 நாட்களுக்கு மேல் முதலான சாதனம் பயன்படுத்தப்படவில்லை என்றால் மற்றைய சாதனங்களில் இருந்து தானாக செயலிழந்து விடும்.
QRகோட் கொண்டு பல சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
வரும் சில நாட்களில் வாட்ஸ்அப் வெப் தளத்தில் உங்களின் மொபைல் நம்பரை பதிவிட்டு அதன் பின் மொபைல் நம்பருக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் கொண்டு இலகுவாக இணைந்துக் கொள்ளலாம்.
இந்த முறை ஒரு சில வாரங்களில் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan