Paristamil Navigation Paristamil advert login

அல்ஜீரியாவில் கோர விபத்து... 32 பேர் பலி!

அல்ஜீரியாவில் கோர விபத்து... 32 பேர் பலி!

21 ஆடி 2023 வெள்ளி 03:21 | பார்வைகள் : 24717


அல்ஜீரிய நாட்டில் பஸ் - கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

32 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அல்ஜீரியா - டமன்ராசெட் மாகாண சாலையில் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

அதிகாலையில் அடோல் கிராமச்சாலையில் பஸ் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

பஸ்சிற்குள் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

இந்த விபத்தில் 32 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்