இலங்கையில் 328 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

21 ஆடி 2023 வெள்ளி 03:19 | பார்வைகள் : 14095
328 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் நள்ளிரவுடன் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் பொருட்களின் விபரங்களை அவர் அறிவிக்கவில்லை.
எனினும், இந்த பட்டியலில் பழ வகைகள், மரக்கறி, வாகன உதிரிப் பாகங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மின்சாதனப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் அடங்குவதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் போது, பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளால் 1. 7 பில்லியன் டொலர் சேமிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்திற்கு அறியத்தந்திருந்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1