டுவிட்டரில் புதிய வசதி அறிமுகம்
10 வைகாசி 2023 புதன் 11:19 | பார்வைகள் : 9886
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார்.
அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் டுவிட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது.
சோதனை அடிப்படையில் டுவிட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதனால் பயனாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து இதனை லாபகரமாக மாற்றுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan