Paristamil Navigation Paristamil advert login

ட்விட்டர் பெயரை மாற்ற எலான் மஸ்க் திட்டம்...

ட்விட்டர் பெயரை மாற்ற எலான் மஸ்க் திட்டம்...

24 ஆடி 2023 திங்கள் 05:34 | பார்வைகள் : 13190


சமூக செயலியான ட்விட்டருக்கு விரைவில் மாற்று பெயரை வைக்க எலான் மஸ்க் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
 
மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டாவை எலான் மஸ்க் நியமித்தார்.
 
இதனை தொடர்ந்து ட்விட்டர் சிஇஓ லிண்டா வழங்கி இருந்த தகவலில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது எக்ஸ் எனப்படும் புதிய செயலியை உருவாக்குவதற்காக நடவடிக்கையே என்று தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில் எலான் மஸ்க் இன்று வெளியிட்டுள்ள அவருடைய ட்விட்டர் பதிவில், விரைவில் ட்விட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் (லோகோ) விடை கொடுக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.
 
அத்துடன் எக்ஸ்(X) என்ற புதிய லோகோ இன்று இரவு வெளியிடப்பட்டால், நாளை அதோடு உலகம் முழுவதும் வலம் வருவோம் என தெரிவித்துள்ளார்.
 
 இதற்கிடையில்  ட்விட்டர் என்று இருக்கும் வர்த்தக குறியீட்டு பெயரை எலான் மஸ்க் மாற்ற இருப்பதாக தெரிவித்து இருப்பது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
எலான் மஸ்க் ஏற்கனவே எக்ஸ்.ஏ.ஐ என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்