Paristamil Navigation Paristamil advert login

வாங்கிக் கட்டிக் கொண்ட கணவர்...

 வாங்கிக் கட்டிக் கொண்ட கணவர்...

18 வைகாசி 2014 ஞாயிறு 12:14 | பார்வைகள் : 14351


 சமையல் செய்து கொண்டிருந்தார்.

 
கணவர் ஹாலில் அமர்ந்த படி, அலுவலகக் கோப்புகளை படித்துக் கொண்டிருந்தார்.
 
சமையலறையில் இருந்த மனைவி தனக்கு உதவி செய்ய வருமாறு தன் கணவரை அழைத்தாள்.
 
பிறகு, அங்கே என்ன நடக்கிறது என பாருங்களேன்...
 
உதவக் கூடாதா..?
 
மனைவி: ஏங்க வீட்ல வந்தும் பைலைக் கட்டிக்கிட்டே அழறீங்களே, எஅன்க்கு அடுப்படியில் வந்து ஏதாவது உதவி செய்யக் கூடாதா...?
 
பைல் மீது தலை வைத்து...
 
கணவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால், மெதுவாக ஹாலுக்குள் எட்டிப் பார்க்கிறாள் மனைவி. அங்கே, பைலின் மீது தலை வைத்து கணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
 
பளார் என ஒரு அறை...
 
மெதுவாக கணவன் அருகில் சென்ற மனைவி, அவன் தலையை வருடிக் கொடுக்கிறாள். பின் மெதுவாக முகத்தை திருப்பி ‘பளார்...' என ஓர் அறை கொடுக்கிறாள். கணவர் அடிவாங்கிய அதிர்ச்சியில் முழிக்கிறார்.
 
எப்பூடி...
 
பின், மனைவி சொல்கிறார் இப்படி... ‘இப்பத்தான் வாட்ஸ் அப்ல ஒரு நிமிசத்துக்கு முன்னாடி வரை நீங்க சாட் பண்ணினதா காட்டுது... யார்கிட்ட நடிக்கிறீங்க...'
கணவர் :..!!!!

வர்த்தக‌ விளம்பரங்கள்