Paristamil Navigation Paristamil advert login

இன்னக்கி நல்ல நாள்

இன்னக்கி நல்ல நாள்

14 பங்குனி 2021 ஞாயிறு 12:39 | பார்வைகள் : 13772


கணவன் மனைவியிடம்... '' இன்னக்கி நல்ல நாள் டி'' ன்னு சொன்னார் . மறுநாளும் '' இன்னக்கி நல்ல நாள் டி'' ன்னு சொன்னார். திரும்பவும் அடுத்த நாளும் '' இன்னக்கி நல்ல நாள் டி'' ன்னு சொன்னார்.

 
இப்படியே ஒரு வாரம் பொறுத்து பார்த்த மனைவிக்கு கோபம் உச்சத்தை தொட்டது... '' ஏன் இப்படி ஒரு வாரமா, இன்னக்கி நல்ல நாள், இன்னக்கி நல்ல நாள்னு என்கிட்டே சொல்லி பொலம்புறீங்க... என்ன ஆச்சு உங்களுக்கு?
 
கணவர் சொன்னார், '' போன வாரம் நாம சண்டை போடும் போது... நீ என்ன சொன்ன..? இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா ஒரு '' நல்ல நாளா'' பார்த்து எங்க அம்மா வீட்டுக்கு போய்டுவேன் பாத்துக்கோங்கன்னு சொன்னல,, அதான் உனக்கு நியாபகம் படுத்தினேன்.
 
 
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்