Paristamil Navigation Paristamil advert login

என் விம்மல்...!

என் விம்மல்...!

30 சித்திரை 2013 செவ்வாய் 08:43 | பார்வைகள் : 15813


 

மனதுள் போராட்டம்
மகிழ்வில்லா வாழ்க்கை..!
மாசுபட்ட உள்ளங்கள் நடுவே
மாறிடா என் உள்ளம்..!

மின்மினியாய் வந்து செல்லும்
சில சந்தோஷங்கள்
மீண்டும் கிடைக்குமா?
மீண்டிட தான் முடிந்திடுமா?!

முன்னோக்கி சிந்தித்தால்
முள்ளாக பல நினைவு
மூச்சுக் குடிக்கும்
மூலதனமாய் சோகங்கள்..!

மெல்லிய தென்றலாய்
பல நினைவுகள்
மெல்லிய வலியாய்
சில நனைவுகள்
மேடை போட்டு காட்டுதிங்கு
மேலோர் கீழோர் உள்ளங்களை..!

மையம் கொண்ட
மன உளச்சல்
மொத்தமாய்
கொன்றது உள்ளமதை..!
மோதலில் தோற்ற
படைவீரனாய்
மௌனம் கொண்டது
என் விம்மல்...!

http://pirashathas.blogspot.com/

வர்த்தக‌ விளம்பரங்கள்