என் குட்டி தேவதை...!
7 ஆனி 2013 வெள்ளி 13:25 | பார்வைகள் : 15353
ஆனந்த யாழை
அன்புடன் மீட்டுகிறாய்..!
ஆயிரம் சொந்தங்களை
அன்பால் கூட்டுகிறாய்..!
தாயே தெய்வமென
தலைவணங்கும் தேவதையே..!
தந்தைக்கு என்றும்
தனி அன்பு தருபவளே..!
தோட்டத்து ரோஜா பார்க்குதடி
தேவதை உனக்காய் புக்குதடி..!
வானத்து நிலவு பார்க்குதடி
வண்ணமகள் அழகை கூட்டுதடி...!
என் தேவதை நீயடி-உன்
புன்னகை எனக்கு போதுமடி..!
அள்ளி அணைத்தால்
ஆயிரம் துன்பங்கள் ஓடுதடி..!
உன் மொழி எனக்கு போதுமடி
உலகை மறந்து வாழ்வேனடி..!
-தோழி பிரஷா-






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan