இரண்டாம் தாய்...!
1 ஐப்பசி 2013 செவ்வாய் 12:57 | பார்வைகள் : 15088
வாழ்க்கை எனும்
நெடுந்தூர பயணத்தில்
பயணிக்கும் நான்,
நிலை தடுமாறி
விழும் போது
ஏந்துபவள்
என் அன்னையானால்
பெரும் பாக்கியசாலி
நானாகியிருப்பேன்..
ஆனால்,
விதி வரைந்த
கோலத்தில்
வித்தாகி போன
என் தொப்புள் கொடி உறவு
ஏனோ
கண்களை காயப்படுத்தி
ஈரப்படுத்தி செல்வதே
இயல்பாகி போனது...
எனினும்
கண்களில் ஓரம்
குவித்து கிடக்கும்
பனிக்கட்டிகளை
அன்பு எனும்
ஆயுதங் கொண்டு
துடைத்தெடுத்து
பரிவுடன் தடவும்
இவள்!
பெண் ரூபத்தில் வந்த
என் அன்னையோ!?






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan