உன்னைத்தேடி
24 வைகாசி 2012 வியாழன் 17:20 | பார்வைகள் : 16251
அவளைத் தேடினேன் ஓடினேன்
இறுதியில் அவளருகில் நாடினேன்
பிரிந்தேன் மீண்டும் நாடுவேன்
என்ற நம்பிக்கையில்.....
அந்த நாட்களை எண்ணி ஓடுவேன்
அவளை நாடுவேன்.
அந்தக்காலம் வரும்... .
கண்ணுக்கு தெரியவில்லை
அவளின் முகம்
குரல் மட்டும் தூரத்தில் ஒலிக்கிறது ....
அன்பே வா!
என் அருகில் வா
எப்படி அடைவேன் கணப்பொழுதில்
பாவி நான் இருப்பதோ அயல் நாட்டில்...
எனக்காக இழந்தவை அதிகம் என்றாய்..
இனிமேலும் இழப்பேன் என்றாய் ......
இழந்துடு என் எதிரிகளை என்றேன்.
நீ என்னையே இழக்க துணிந்துவிட்டாய்.
இருப்பினும்
நான் உன்னைத்தேடி.
தனிமையில் இருந்து நான்
பல வழி துயரம் கொண்டேன்
உன்னை கண்டேன்
பின்பு காதலும் கொண்டேன்
அன்று தான்
கனவிலும் சுகமும் கண்டேன்
இதனால் தானோ
நான் உன்னைத்தேடி...
பாதியில் பிரியும் உறவும் இல்லை
பாதைமாறி போக வழியும் இல்லை
மீறி போக நினைத்தால்
இருவருக்கும் வாழ்வு இல்லை - இருந்தும்
இதனை நான் எதிர்பார்க்கவும் இல்லை
இதனால் தானோ
நான் உன்னைத்தேடி அயல் நாட்டுக்கு .......






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan