உனக்காக வாழ்கிறேன் ....
2 ஆடி 2012 திங்கள் 14:32 | பார்வைகள் : 15856
உருகும் நினைவுகள்
நகரும் நிமிடங்களில்
மருகும் மனதில்
விரவி படருகையில்
நெஞ்சம் வலிக்கிறது ....
உன்னில் மையல்
கொண்ட அந்த நாட்களில்
நின் தரிசனம் காணக்
காத்திருந்த காலங்கள் கூட
சுகமாய்த்தான் வலித்தன...
உன் பிரிவு
நிச்சயமான அந்த
நாட்கள் உயிர் கருகும்
கணங்களாய் வலி கூட்டி
அழவைத்தன...
பாசம் சொல்லாமலே...
நேசம் வைத்த நெஞ்சம்
பேதையின் விழி நீரால்...
சிதைந்து போனபோதும்
வலித்தது....
உன்னால் வலிகள் தான்
என் வாழ்க்கையின் வரம்
என்றால் மறுக்காமல்
ஏற்கிறேன் உனக்காக...
வலிகள் தொடரும்போதும்...
வலிகளை வலிமையாக்கி
வாழப் பழகுகிறேன் உன்னாலே...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan