Paristamil Navigation Paristamil advert login

காதல் கொலை

காதல் கொலை

2 ஆடி 2012 திங்கள் 14:48 | பார்வைகள் : 16252


 

ஏய் விஞ்ஞானமே
கடுகைத் துளைத்தாய்
அணுவைத் துளைத்தாய்
ஏழ் கடலைத் தாண்டினாய்
ஆழ் கடலைத் தோண்டினாய்

அறிவியலில் அற்புதம் பல
செய்தாய் ! - ஆனால்
பெண்ணின் மன ஆழத்தைக் 
கண்டறியும் கருவியைக்
கண்டறிய மறந்தாயோ...!

அன்று
தெருவில் நடந்தாள்
மனத்தைக் கவர்ந்தாள்
விழியில் இணைந்தாள்
இதயத்தில் நுழைந்தாள்
உயிரில் கலந்தாள்
ஒரு காதலியாய்.....!

இன்று
தெருவில் நடந்தாள்......
வேறொருவனுடன்
புதுமணப்  பெண்ணாக,
காதல் கொலை செய்துவிட்டு......!

வர்த்தக‌ விளம்பரங்கள்