கன்னிப் பறவைகள்..

21 ஆவணி 2012 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 15951
பெட்டி நிறைய
பணம் இருந்தும்
பெருமூச்சு விட்டு
காத்திருக்கிறாள் அக்கா..
அழகும் அறிவும்
இருந்தும்
கண்ணீரோடு
காத்திருக்கிறாள்
பக்கத்து வீட்டு தோழி..
'தோசம்' எனும்
மூடநம்பிக்கையும்
'சீதனம்' எனும்
சம்பிரதாயமும்
அழியும் வரை
வீட்டுச் சிறையில்
காத்திருக்கும்
கன்னிப் பறவைகளாக
பெண்கள்...
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1