Paristamil Navigation Paristamil advert login

போகும் நீ போ....

போகும் நீ போ....

28 கார்த்திகை 2012 புதன் 06:45 | பார்வைகள் : 14924


 

அன்பை கொஞ்சம்
நீ தந்தாய்...
அதில் அதிகம்
நான் நனைந்தேன்.

அதை அதிகம்
நான் தரவே
தகர்த்து விட்டு போறாய்.
தாகித்தழுகின்ற இதயத்தை...

பிடிக்காத உறவை பிரிக்க
சிலர் சொல்வார்கள்.
வேண்டாமென்று...
சிலர் செய்து
பிரிவை தருவார்கள்.
நீயும் இதிலுள்ளவரே!

போங்கள்...
என்னை விட்டு
விலகுவதில்தான்
உங்களுக்கு விடிவு என்றால்.
யாரையும் தடுக்க வில்லை.

இந்த இருட்டறைக்குள்
எண்ணெயாக ஊற்றி
என் வேதனையை
எரித்துக் கொள்வேன்.
தனிமையில்...

ஆனால் ஒன்று...
நாளை திரும்பிடாதீர்
தீயிட்ட என்
முகத்தை பார்க்க..
அன்பாக எத்தனையோ சொன்னேன்
அலட்சியமாக்கி விட்டு
போகும் நீ போ...
இனிமேல் சத்தியமாய்
சந்திக்கவே மாட்டேன்.
தினம் வந்தது போல்
திரும்பி வரவும் மாட்டேன்

வர்த்தக‌ விளம்பரங்கள்