உன் நினைவுடனே
4 மார்கழி 2012 செவ்வாய் 18:07 | பார்வைகள் : 15554
கனவுகள் கலைந்திட்ட தேசத்தில்
உன் நினைவுகளோடு நான் மட்டும்!
இனம் புரியா சில புதிர்கள்
என் சிரசுள் சிந்தனையை வளர்க்க.
உன்னைத்தேடும் என் விழிகள்
உறக்கமின்றி விழித்தபடி!
தினசரி ஏமாந்து போகின்றன.
என் நாளாந்த வாழ்வில்- இது
நடமாடும் கனவாகிப்போச்சு.
மௌனிக்கும் என் இதயம்
மரணிக்குமே தவிர
உன்னை மறக்காது .
என் நிலையற்ற வாழ்வில்
நிலையான உன் நினைவை
சிலையாக செதுக்க எண்ணுகின்றேன்.
நீள் மலையாகத்தொடரும்
உன் மௌனம் ..........!
என்னை மரணிக்க செய்யுதடி.
மறுபடி நான் பிறந்தாலும்
உன் நினைவுடனே.............






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan