முதல் இரவு..
25 மார்கழி 2012 செவ்வாய் 09:59 | பார்வைகள் : 15967
பொல்லா உலகினுள்
பொருளாகி போன இருவர்
பேதமின்றி வேதமின்றி
பெருமிதத்தோடு பேரின்பம்
கண்டிடும் இரவு
ஆயிரம் உறவு
அருகில் இருந்தும்
அனைத்தையும் தாண்டிய
உறவு ஒன்று
அலையெனவே அழகாய்
ஆட்கொள்ளும் இரவு
தேகங்கள் இணையும் நாள்
தேன் சொட்டும் நினைவுகளால்
தேவைகளை உரைக்கும்
தேன் போன்ற இரவு
உறவுகள் கூடி இருந்தம்
தனிமையை தேடி நாடி
இளமையின் தாகம் தீர்க்க
இணைந்திடும் இரவு
ஒரு நிலை
இரு சுகம் என
உறவாடிய உள்ளங்களுக்கு
உணர்த்தி
இரு உள்ளத்தை
மகிழ்விக்கும் இன்பமான இரவு
அதுதான் முதல் இரவு
-சிந்து.எஸ்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan