உதிரும் சிறகுகள்....!!

19 புரட்டாசி 2017 செவ்வாய் 14:26 | பார்வைகள் : 14604
மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து -
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளரம் வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1