எனக்கு இரண்டு காதலிகள்...!!!

7 ஐப்பசி 2017 சனி 14:37 | பார்வைகள் : 13290
ஒருத்தி
உன் வீட்டில்
வசிக்கிறாள்
இன்னொருத்தி
என் இதயத்தில்
வசிக்கிறாள்
உன்னைக்
கண் திறந்து
பார்க்கிறேன்
அவளை
கண் மூடிப்
பார்க்கிறேன்
அவளைக்
கூட்டிக் கொண்டுதான்
உன்னைப்
பார்க்க வருகிறேன்
உன்னைப் பார்த்துவிட்டு
அவளோடுதான்
வீடு திரும்புகிறேன்
உன்னிடம்
ஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக
அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்
நீ அவளைப்
பார்க்கவேண்டுமென்றால்
சொல்
அனுமன்
தன் நெஞ்சைப் பிளந்து
ராமனிடமே
ராமனைக் காட்டியது மாதிரி
உன்னிடமே
உன்னைக் காட்டுகிறேன்
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1