தீரா காதல்!
12 ஐப்பசி 2019 சனி 04:29 | பார்வைகள் : 14590
எல்லா பகல்களும்,
என் செல்பேசியில்
உன் குறுந்தகவல்களை
எதிர்பார்த்தே விடிகிறது...!
தினம் உன் முகம் காணும்
என் ஆவலோ
வாரமொருமுறையின்
வீடியோ காலில் முடிகிறது...!
உன் ஈர முத்தங்கள் கூட
கன்னத்திற்கு பதிலாய் - என்
கண்களையே நனைக்கிறது...!
தனிமையில் படுத்து
உன் நினைவுகளை அணைத்தே
உறங்குகிறேன்...!
கட்டிச்சென்ற தாலியும்
கொட்டிச்சென்ற அன்புமே
எனக்கு துணையாய்...!
கடல்கடந்து சென்ற உனக்காய்
காத்திருக்கிறேன் நான்...!
தீரா காதலுடன்...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan